அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளை இல்லாமல் செய்வதற்காக ஜே.வி.பியினால் பாதாள குழுக்கள் பயன்படுத்துகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுவதாக “ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட டேன் பிரியசாத் என்பவர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரானசெயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர் என்றும், இதனால் இவரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள “ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்சந்திப்பில் உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் பொதுச் செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசம்
டேன் பிரியசாத் “ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி வேட்பாளராக இருந்தார். அதேபோன்று இவர் ஊழல்மோசடிகளுக்கு எதிரான சமூக செயற்பாட்டாளராக பிரபலமாக இருந்த நபராகும். இவரின் கொலை சந்தேகத்திற்கிடமானதாக உள்ளது.
இந்த சந்தேகத்திற்கு சில காரணங்கள் உள்ளன. இவர் இறப்பதற்கு முன்னரே உயிரிழந்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அவரின் மரணத்தை எதிர்பார்த்திருந்ததை போன்றே இருந்துள்ளது.
அதேபோன்று முன் ஏற்பாடுகளுடன் இருந்ததை போன்று சமூக வலைத்தளங்களில் அவரின் மரணம் தொடர்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று உள்ளூராட்சித் தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்னர் எதிர்தரப்பு வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் அரசாங்கம் ஒரு வசனமேனும் கூறாமல் இருக்கின்றது.
இந்த விடயங்களை பார்க்கும் போது அவரின் மரணம் சந்தேகத்திற்கிடமானதாகவே இருக்கின்றது.
டேன் பிரியசாத், இலங்கை வரலாற்றில் மிகவும் பெரிய மோசடியான ஜே.வி.வியின் கொள்கலன் திருட்டு தொடர்பில் முறைப்பாடு செய்தவர்களில் ஒருவராவார். வெளிப்படையாக அச்சமின்றி கதைத்தவராவார்.
இதனால் இவரின் கொலைக்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்ற சந்தேகங்கள் மக்களுக்கும் எமக்கும் உள்ளது.
திடீரென பாதாள குழுவின் தலைவர் ஒருவருடையது என்று கூறப்படும் குரல்பதிவொன்று வெளியாகியுள்ளது. இது உண்மையானதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் செய்திகளில் இந்த குரல் பதிவு வெளியாகியுள்ளது.
அதில் குறிப்பிட்டபாதாள குழுத் தலைவர் கூற முயற்சிப்பதானது ஜே.வி.பிக்கு எதிராக செயற்படுவது தவறானது என்பது போன்றே உள்ளது. இதனால் பாதாளக் குழுக்கள் ஜே.வி.பிக்கு எதிரான சக்திகளை ஒடுக்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
இது ஆபத்தானது. நாட்டின் தேசிய பாதுகாப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. சõதாரண பிரஜைகளின் உயிரை பாதுகாக்கும் உரிமையை இல்லாமல் செய்யும் நிலைக்குநாடு தள்ளப்பட்டுள்ளது என்றார்.